search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜருகண்டி விமர்சனம்"

    பிச்சுமணி இயக்கத்தில் ஜெய், ரெபா மோனிகா ஜான், டேனி, ரோபோ சங்கர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘ஜருகண்டி’ படத்தின் விமர்சனம். #Jarugandi #JarugandiReview
    நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர் ஜெய். பணம் கட்டாதவர்களின் கார்களை எடுத்து செல்லும் வேலை செய்து வருகிறார். ஒருநாள் கவுன்சிலர் ஒருவரின் காரை தூக்குவதால் அவருடைய வேலை பறிபோகிறது. இதனால் ஏதாவது ஒரு தொழில் செய்து வாழ்க்கையில் செட்டிலாக வேண்டும் முயற்சி செய்து வருகிறார். 

    டிராவல்ஸ் வைக்க வேண்டும் என்று முடிவு செய்து, பேங்க்கில் லோனுக்கு முயற்சி செய்கிறார். ஆனால், எங்கும் கிடைக்கவில்லை. இதை நண்பன் டேனியிடம் சொல்ல, அவரோ இளவரசு மூலம் போலி ஆவணங்கள் வைத்து லோன் வாங்குகிறார்.

    அந்த பணத்தை வைத்து கார்கள் வாங்கி டிராவல்ஸ் நடத்தி வருகிறார் ஜெய். சில நாட்களில் இன்ஸ்பெக்டர் போஸ் வெங்கட்டுக்கு, போலி ஆவணங்கள் வைத்து ஜெய் லோன் வாங்கியது தெரியவருகிறது. 

    ஜெய் மற்றும் டேனியை அழைத்து ரூ.10 லட்சம் தரவேண்டும் இல்லையென்றால் ஜெயிலில் அடைத்து விடுவேன் என்று மிரட்டுகிறார். மேலும் இந்த பணத்தை இரண்டு நாளில் தரும்படியும் போஸ் வெங்கட் கேட்கிறார்.



    என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கும் நேரத்தில், செல்வந்தரும், நாயகி ரெபா மோனிகாவை காதலிப்பவருமான ரோபோ சங்கரை சந்திக்கிறார்கள். பத்து லட்சம் பணம் தர சம்மதிக்கும் ரோபோ சங்கர், அதற்கு பதிலாக, நாயகி ரெபா மோனிகாவை கடத்தி வர சொல்லுகிறார்.

    இறுதியில் ஜெய், நாயகியை ரெபா மோனிகாவை கடத்தினாரா? போஸ் வெங்கட்டுக்கு ரூ.10 லட்சம் கொடுத்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    படத்தின் நாயகனாக நடித்திருக்கும் ஜெய்யை வேறொரு பரிமாணத்தில் பார்க்க முடிகிறது. வழக்கமான வெகுளித்தனமான ஜெய்யாக இல்லாமல், காமெடி, ஆக்‌ஷன் என அனைத்திலும் திறம்பட செய்திருக்கிறார். ஜெய்யின் கதாபாத்திரம் அளவிற்கு டேனி மற்றும் ரோபோ சங்கரின் கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இருவரும் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள். குறிப்பாக டேனிக்கு இது பெயர் சொல்லும் படமாக அமைந்திருக்கிறது. போலீசாக வரும் போஸ் வெங்கட், அவருக்கே உரிய பாணியில் நடித்திருக்கிறார்.

    கதாநாயகியாக நடித்திருக்கு ரெபா மோனிகா ஜான், அழகாக வந்து அளவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். திரையில் பார்ப்பதற்கு அழகாக இருக்கிறார். 



    வித்தியாசமான திரைக்கதையுடன் படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் பிச்சுமணி. திரைக்கதையில் ஆங்காங்கே தோய்வு ஏற்பட்டிருந்தாலும் ஒரு சில இடங்களில் ரசிக்க வைத்திருக்கிறார். கதாபாத்திரங்களிடம் சிறப்பாக வேலை வாங்கி இருக்கிறார். 

    போபோ ஷஷியின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணியில் அதிக ஸ்கோர் செய்திருக்கிறார். ஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவு சிறப்பு.

    மொத்தத்தில் ‘ஜருகண்டி’ ரசிக்கலாம்.
    ×